தி.மு.க. கூட்டணியில் இருந்து தாவி தவெகவுடன் கைகோர்த்த காங்கிரஸ் ; ஆட்சி அமைக்கும் விஜய்!


தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய மாற்றம் உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்த காங்கிரஸ், தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.க்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது.

த.வெ.க.க்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் குறித்த தகவல்கள் வெளியாகிய உடனே தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கான முழுமையான ஆதரவை காங்கிரஸ் வழங்குவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களில் ஐந்து பேர் இந்த ஆதரவுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மத அடிப்படையிலான அரசியல் சக்திகள் கூட்டணியில் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அரசியல் ஒத்துழைப்பு எதிர்கால உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் எடுத்துள்ள இந்த முடிவு தி.மு.க.க்கு எதிரான துரோகம் எனக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சனம் வெளியிட்டுள்ளார்.