நாட்டில் நிலவி வரும் கடுமையான அனர்த்த நிலைமை : மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபர்!


நாட்டில் நிலவி வரும் கடுமையான அனர்த்த நிலைமையால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (22) இடம்பெற்ற சம்பவத்தில், 64 வயதுடைய ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென வெள்ளநீர் அதிகரித்ததன் காரணமாக குறித்த நபர் சிக்கியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள அபாயம் நீடித்து வருவதால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.