எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் குறியீட்டு முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2026 மே 19 முதல் எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூஆர் குறியீட்டு முறை தொடர்ந்து அமுலில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் இந்த நடைமுறை தொடரப்படுவதாக கூறினார்.
இதன்படி, வாகன வகைகளுக்கேற்ப எரிபொருள் ஒதுக்கீடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்கள் 25 லீற்றர், முச்சக்கர வண்டிகள் 20 லீற்றர், வேன்கள் 50 லீற்றர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 8 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும்.
மேலும், பேருந்துகளுக்கு 100 லீற்றர், நில வாகனங்களுக்கு 40 லீற்றர், லொரிகளுக்கு 200 லீற்றர் மற்றும் சிறப்புப் பயன்பாட்டு வாகனங்களுக்கு 40 லீற்றர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக கட்டுப்பாட்டை மேலும் திறம்பட முன்னெடுக்க கியூஆர் முறை முக்கிய பங்காற்றும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
