சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இணைந்த மீளாய்வுகளை, எதிர்வரும் புதன்கிழமை (27) செயற்குழு பரிசீலிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, வெளிநாட்டு கையிருப்புகளை மீளக் கட்டியெழுப்புதல், பொருளாதார நம்பிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் நிதி ஒழுங்கை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தை வலுவான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
