நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000-க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் ; வெளியான அறிவிப்பு!
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000-க்கும் மேற்பட்ட அதிபர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களை விரைவாகத் தேர்வு செய்து நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன கூறியுள்ளார் என்று ஒரு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, அதிபர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை சில தொழில்நுட்ப சிக்கல்களால் தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த சிக்கல்களை சரிசெய்து, விரைவில் பரீட்சையை நடத்தி தேவையான நியமனங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்வுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
