கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் 2 பஸ்கள் மோதி விபத்து!


கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்லை, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (13) காலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது, மாணவர் போக்குவரத்து பேருந்து ஹம்பாந்தோட்டையிலிருந்து அம்பலாந்தோட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தோர் அல்லது ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.