இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில் தவெக முன்னிலை : மகிழ்ச்சியில் எடப்பாடியார்!


இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 140 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கே. பழனிச்சாமி, அவர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், அன்பில் மகேஷ், ஓ. பன்னீர் செல்வம், சேகர் பாபு, கே. என். நேரு உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரும் பின்னடைவில் உள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக முதலிடம் பிடித்துள்ளது. அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.