வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் : தவெக தலைவர் விஜய்யின் இல்லத்துக்கு பூங்கொத்துடன் சென்ற பிரதான ஜோதிடர்!


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் இல்லத்துக்கு பிரதான ஜோதிடர் ராதன் பண்டித் பூங்கொத்துடன் சென்றுள்ளார். இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் அவர் விஜய் இல்லத்துக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (04) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை வெளியாகியுள்ள 232 தொகுதிகளுக்கான முடிவில், தவெக 140 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதேவேளை, விஜய் வெளியே செல்லும் போது ரசிகர்கள் அவரை பின்தொடரக்கூடும் என்பதால், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு பணியில் சுமார் 300 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.