பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட விடுதி முற்றுகை - 10 பேர் கைது!


பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (23) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சோதனையின் போது குறித்த இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.