லிட்ரோ எரிவாயு விலை குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!


ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

இன்று மாலை நிதியமைச்சு அதிகாரிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர், விலை திருத்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், எரிவாயு கையிருப்பு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.