ஈரானை முற்றுகையிட அமெரிக்க படைகள் தயார் – டிரம்ப் அறிவிப்பால் உலகளவில் மீண்டும் பதற்றம்!
அமெரிக்க படைகள் ஈரானை முற்றுகையிடத் தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலக நாடுகளில் மீண்டும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கும், ஏற்கனவே பலவீனமடைந்துள்ளதாகக் கூறப்படும் எதிரியை முழுமையாக அழிப்பதற்கும் தேவையான அனைத்து அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் இராணுவத்தினர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுடன் எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் உடன்படிக்கையின் அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, அமெரிக்க இராணுவப் பங்கேற்பு அந்தப் பகுதியில் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உடன்படிக்கை முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறாது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஈரான் தொடர்பான போர் நிறுத்தம் மற்றும் உடன்படிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், டொனால்ட் டிரம்பின் இந்தக் கடுமையான எச்சரிக்கை மத்திய கிழக்கு மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
