இன்று நாட்டை வந்தடையவுள்ள பாரிய கச்சா எண்ணெய் கப்பல்!
இன்று (26) மசகு எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தக் கப்பல் மூலம் சுமார் 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது என அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமைக்கு பின்னர், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இதுவாகும்.
மேலும், இன்று வருகை தரும் இந்தக் கப்பலுடன் ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு முழுமையாக பூர்த்தியடைந்துள்ளதாக மேலாண் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
