நாட்டில் அதிகரிக்கும் திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை!


இலங்கையின் மொத்த சனத்தொகையில் 41.8 சதவீதமானோர் திருமணமாகாதவர்கள் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டுத் தொகைமதிப்பு ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக, மக்கள் தொகை மற்றும் சமூகவியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சாந்தனி விஜேபண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், திருமணமாகாதவர்களின் எண்ணிக்கை தற்போதைய தரவுகளின்படி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.