இலங்கைத் தூதுவர் மற்றும் நேபாளப் பிரதமர் சந்திப்பு!


காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய தூதரகத் தலைவர்களுடன் இணைந்து நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவைச் சிங் தர்பாரில் உள்ள நேபாளப் பிரதமர் மற்றும் அமைச்சரவை அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது, நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் அதில் பிரதமர் பெற்ற வெற்றி குறித்துத் தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அவர் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.