தங்க விலை இன்று சரிவு; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, இன்று (09) உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்க விலையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி நுகர்வோரிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நாட்டில் தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 400,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 368,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கிராமுக்குக் கணக்கிட்டால், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 50,000 ரூபாய் மற்றும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
