மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் லொறி மோதி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!


கண்டி – கம்பொல – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பல்லேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கம்பொலவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், எதிர் திசையில் வந்த டிப்பர் லாரியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.