மின் பாவனையாளர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (07.04.2026) உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, 90 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தச் சலுகை அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது வழங்கப்படும்.
அடுத்த 3 மாதங்களுக்கான செலவை அரசாங்கமே ஏற்கும். எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்திக்கு அனல் மின் நிலையங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
