எரிபொருள் விலைகளை அதிகரித்த லங்கா IOC நிறுவனம்!
இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை திருத்தியமைத்ததற்கமைய, டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) – 590 ரூபாய்
லங்கா சூப்பர் டீசல் (LSD) – 600 ரூபாய்
எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – 620 ரூபாய் எனவும் ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
