நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
இளவாலை பொலிஸாரால் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னர் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் காணித் தகராறு தொடர்பாக பெண் ஒருவரை துப்பாக்கியால் அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
Tags:
இலங்கை செய்தி
