மீன்களின் விலை வீழ்ச்சி!
மீன்களின் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை மத்திய மீன் சந்தை தொகுதி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லத் தவிர்த்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளும் குறைந்துள்ளன. இதுவே விலை குறைவிற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மீன் ஒரு கிலோ 800 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
