9 கோடி ரூபாய் பணத்துடன் கைதான ஹெரோயின் கடத்தல்காரி!


ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய ஒரு வங்கி கணக்கில் 7 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் 95 சென்ட் தொகையும், மற்றொரு கணக்கில் 2 கோடி ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.