“எஹிபஸ்ஸிக்கோ” சர்வதேச சமாதான நடைபயணம் இன்றுடன் நிறைவு!
“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று (28) நடைபெறுகிறது.
இந்த நடைபயணத்தின் அரச விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிச் செல்லும்.
அரச விழாவின் போது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு ஸ்ரீ மஹா போதியின் புனித மரக்கன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வு சமாதானம் மற்றும் சமரசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெறுகிறது.
Tags:
இலங்கை செய்தி
