இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!
நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வீதி விபத்துகளால் 676 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கவலைக்கிடமான அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மோசமான சாலை நிலைமைகள், பொறுப்பற்ற ஓட்டுநர் பழக்கம், அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன.
2026 ஏப்ரல் 5 ஆம் திகதி நிலவரப்படி, வீதி விபத்துகளில் 230 பாதசாரிகளும் 247 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
