சூப்பர் டீசல் விலையை 600 ரூபாவாக அதிகரித்த சினோபெக்!


இலங்கையில் சூப்பர் டீசல் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (06) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 28 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுடன், சூப்பர் டீசலின் புதிய விலை 600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.