லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் உயர்வு!


இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1,070 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 5,700 ரூபாய்.

5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 2,280 ரூபாய் என லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.