நீர் விநியோகத்தடை 18 மணிநேரமாகக் குறைப்பு - நீர் வடிகாலமைப்புச் சபை!
நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தடை காலத்தை 18 மணிநேரமாகக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகள் மற்றும் இடங்கள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை.
அத்துடன் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
