அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை மீண்டும் பணிப்புறக்கணிப்பு!


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது.

இன்று இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை (04) காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நியாயமற்ற இடமாற்றம் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.