‘MOTHER LANKA’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்!
‘MOTHER LANKA’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளமொன்றை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் மக்களின் கருத்து, யோசனைகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைக்க இதனூடாக சந்தர்ப்பம் உள்ளது.
முன்வைக்கப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு வழங்கும் செயற்பாடும் இந்த டிஜிட்டல் தளம் ஊடாக இடம்பெறுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
