போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது பரவி வருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு மூலோபாய நிபுணர் Asela Waidyalankara எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது தனிப்பட்ட தகவல்களைப் பெறும் நோக்கில் இந்த போலியான இணையத்தளத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தனது X (Twitter) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “உத்தியோகபூர்வ தளத்தைப் போன்ற தோற்றமளிக்கும் இந்த இணையத்தளத்தில் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் உள்ளிட வேண்டாம்” என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தவிர மற்ற எந்த இணைய முகவரிகளிலும் அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலம் வரும் இணைப்புகளிலும், வாகன இலக்கம், தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.