மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று!
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) அறிவிக்கப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த கட்டணத் திருத்தம் குறித்து அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
