எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி!


இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதாகவும் லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே. ரகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய லங்கா IOC நிறுவனம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.