மட்டக்களப்பு கிணறு விவகாரத்தில் வெளியான முக்கிய தகவல்!


மட்டக்களப்பில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதான சந்தேகநபர்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான விளக்கமறியல் மற்றும் தடுப்புக் காவல் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பெண்ணுக்கும், அவரது சகோதரனுக்கும் 2026.03.30ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, முதலாம் பிரதான சந்தேகநபரை மேலும் 3 நாட்கள் காவல்துறை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று கைது செய்யப்பட்ட மயக்கமருந்து வைத்திருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யவும், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நகைக்கடை வியாபாரிகளை 2026.04.02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.