மரக்கறி மற்றும் தேங்காய் எண்ணெய்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பற்றாக்குறையைத் தொடர்ந்து, மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாயால் அதிகரிக்க வணிகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் பற்றாக்குறையால் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையும் ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. அதேபோல், அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையும் உயரக்கூடும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி எண்ணெய் உட்பட இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்கள் நாட்டிற்கு 4 முக்கிய நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
