அதிக வெப்பம் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்!
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பிள்ளைகளை நீரிழப்பிலிருந்து பாதுகாக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பிள்ளைகளுக்கு அதிகளவு நீர், திரவ உணவுகளை வழங்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நன்றாக நீர் அருந்தும்படி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகமாக இருப்பதால் தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரு தடவையாவது குளிக்க வைக்க வேண்டும்.
மேலும் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் மாணவர்கள் தேவையான அளவு நீரை பருகாவிட்டால் நீரிழப்பு ஏற்பட்டு வெப்ப அதிர்ச்சி நிலைக்கும் உள்ளாகலாம் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்கள் இதயம், மூளை பாதிப்படைந்து வலிப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
