ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் Giorgia Meloni தெரிவித்துள்ளார்.

இத்தாலி பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தனது நாட்டுப் படைகளை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் எந்தப் போரிலும் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது என்றும், குறிப்பாக ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.