வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே, நீரை வீண் விரயம் செய்யாது, அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.
அத்துடன், அளவுக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், குழாய் ஊடாக நீரைப் பெற்றுக் கொள்ளும் இறுதி முனையத்தில் உள்ள இடங்களுக்கும் செல்லும் நீரின் அழுத்தம் குறையக்கூடும்.
நாட்டில் வறட்சி நிலைமை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, தடையின்றி நீர் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்ல பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
