மீண்டும் உயரும் பேருந்துக் கட்டணம் - எரிபொருள் விலை அதிகரிப்பினால் அரசு அதிரடி நடவடிக்கை!


எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின் கீழ், பேருந்துக் கட்டணங்கள் மீண்டும் திருத்தப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (24.03.2026) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இதை குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக சில தீர்மானங்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது எரிபொருள் விலை உயர்வின் காரணமாக பேருந்துக் கட்டணங்களும் உயர்த்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எனினும், எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைந்தால், அதன் நன்மையை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் கட்டணங்களை குறைப்பதற்கான வாய்ப்பும் பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.