அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு குறித்த விசேட அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த கொடுப்பனவுகள் நாளை (மார்ச் 26) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
முதலாம் கட்டம்: 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டம்: 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக மார்ச் 26 ஆம் திகதி முதல் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
