இலங்கைக்கு வந்தடைந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல் - நிம்மதிப் பெருமூச்சில் மக்கள்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் மத்தியில், இலங்கையினால் ஆர்டர் செய்யப்பட்ட மேலும் ஒரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த ‘சீஃபிரண்டியர்’ எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை கெரவலப்பிட்டிய எரிபொருள் களஞ்சியத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மற்றொரு பகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை வழியாக கொலன்னாவை களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
.webp)