GovPay செயலி ஊடாக 46,635 சாரதிகள் அபராதம்!
நடப்பாண்டில் GovPay செயலி ஊடாக 46,635 சாரதிகள் போக்குவரத்து அபராதங்களை செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை மாத்திரம் 11,715 சாரதிகள் இந்த செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கொடுப்பனவு முறையில், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினாலேயே அதிகளவிலான அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
