க.பொ.த உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள், எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெப்ரவரி 07ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடு முழுவதும் 74 விசேட நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கானவை அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், இன்று (பெப்ரவரி 02) முதல் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மாணவர்கள் பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களை திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது உரிய பாடசாலைகளின் ஊடாகவோ உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.