நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஆஜராகமுடியாது என தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் ஆஜராகாமைக்கான காரணங்கள் எதுவும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை எனவும், உடல்நலக் காரணங்களால் அவர் ஆஜராகமுடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு வழங்கப்பட்ட அழைப்பாணை குறித்து கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2023ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சிய விஜயம் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமார் 16.9 மில்லியன் ரூபாய் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
2023ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தபோது, ரணில் விக்ரமசிங்க, லண்டனில் நடைப்பொற்ற தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மைத்திரி விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார்.
Tags:
இலங்கை செய்தி
