சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு!
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் (Supermarkets) ஒரு முட்டை 55 – 60 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கோழி இறைச்சி சந்தையில் 1300 ரூபா போன்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
விநியோகஸ்தர்கள் தமக்கு வழங்கும் விலைகளை அதிகரித்துள்ளதால்,
இந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது சந்தைக்கு கிடைக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் ஓரளவு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
