மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்! - அனுராதபுரத்தில் சம்பவம்
குடும்பத் தகராறு முற்றியதில் கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) இந்த கொடூரம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
