காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!


இன்று காதலர் தினத்தைக் கொண்டாடும் காதலர்களுக்கு இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்றைய நாளை மரியாதையுடனும் கண்ணியத்துடன் கொண்டாட வேண்டும் என இலங்கை பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.