நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டிகள் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொட்டகலையிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் தலவாக்கலையிலிருந்து கொட்டகலை நோக்கி வந்துகொண்டிருந்த மற்றுமொரு முக்கச்சரவண்டியும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் இரு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
