மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை

அனுராதபுரம் – காங்கேசன்துறை இடையே இயங்கும் யாழ் ராணி தொடருந்து சேவை குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியும் வெள்ளமும் காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதைகளை திருத்தும் பணிகள் காரணமாக, கடந்த காலத்தில் தொடருந்து சேவைகள் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த தொடருந்து சேவை இன்று (01) முதல் காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை → யாழ் ராணி: காலை 06:00 மணிக்கு புறப்படும்

ஓமந்தை → காங்கேசன்துறை: மாலை 03:45 மணிக்கு புறப்படும்

மேலும், சேதமடைந்த தொடருந்து பாதைகளை புனரமைப்பதற்காக கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தொடருந்துகள் ஜனவரி 19 முதல் மார்ச் 31 வரை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.