போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட பொலிஸாரைத் தாக்கிய நான்கு பேர் கைது!
போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மகா ஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வலயாய பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை (31) மகா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு போதைப்பொருள் சோதனையை மேற்கொண்டபோது, சந்தேக நபர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மகா ஓயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியொன்றுடன் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
