இலங்கையில் அவசரகால நிலை நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

 


டித்வா சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு, அதற்கான புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் வகையில் ஜனாதிபதி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 நவம்பர் 28 திகதியிட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, இந்த அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.