மின்சார சபை ஊழியர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்!


இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் நாளை (26) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

அதன்படி, நாளை பிற்பகல் 12.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

தமது கோரிக்கைளை வலியுறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.